சிரம்பான், பிப் 24 – சிலாங்கூரில் ஷா அலாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று போலீஸ் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையில் கை தொலைபேசி விற்பனை மோசடியில் ஈடுபட்ட 20 முதல் 44 வயதுடைய மூன்று பெண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டனர்.
ஒரு பெண்ணிடமிருந்து கை தொலைபேசி வாங்கியதில் தாம் மோசடிக்கு உள்ளானதாக ஒருவர் புகார் செய்ததைத் தொடர்ந்து சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வர்த்தகப் பிரிவு நடத்திய சோதனையில் அந்த அறுவரும் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் தலைவர் சூப்பிரடன்ட் Aibee Abdul Ghani தெரிவித்தார்.
அந்த கும்பலிடமிருந்து 10 கை தொலைபேசிகள், அதற்கான சிம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை செயல்பட்டு வந்துள்ள அந்த மோசடிக் கும்பலிடம் சுமார் 50 பேர் ஏமாந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.