கோலாலம்பூர், பிப் 8- நாம் செய்வது சாதாரண தொழிலாக இருந்தாலும் கூட, அதை நேர்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செய்த விநியோகிப்பாளர் ஒருவரின் செயலை வலைத்தளவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
அண்மையில் Amriofficiall எனும் டிக்டாக் கணக்கில் இடம்பெற்ற காணொளி ஒன்றில், விநியோகிப்பாளர் ஒருவர் கூடுதல் சிரத்தை எடுத்து , வாடிக்கையாளரின் பார்சலை பாதுகாப்பாக விநியோகித்ததைக் காண முடிந்தது,
அந்த விநியோகிப்பாளர் ‘பார்சலை’ விநியோகிப்பதற்காக கொட்டும் மழையில் ஹாரன் அடித்தபடியே கிட்டதட்ட அரை மணி நேரம் வரை காத்திருந்திருக்கிறார்.
எனினும், தனது அண்டை வீட்டிலிருந்து யாரும் வெளியில் வராததால், அந்த வீட்டின் முன்கதவின் மீது ஏறி, மழையில் நனையாத வண்ணம் வாசற்படியில் பார்சலை வைத்துவிட்டு, விநியோகிப்பாளர் திரும்பியதாக, காணொளியைப் பகிர்ந்தவர் பதிவிட்டிருந்தார்.