
பகோத்தா, ஆக 18 – Colombia தலைநகர் Bogota வில் ரெக்டர் கருவியில் 6.1 அளவில் பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அடையாள எச்சரிக்கைகள் எழுப்பப்பட்டதால் மக்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்பட்டது. கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து பெண் ஒருவர் மரணம் அடைந்ததார் என அறிவிக்கப்பட்டது. எனினும் பெரிய சேதம் மற்றும் உயிர்ச்தேசம் குறித்த தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சிலர் மின்தூக்கியில் சிக்கிக்கொண்ட சிறு சிறு சம்பவங்களும் ஏற்பட்டதாக கூறப்பட்டது.