Latestமலேசியா

கொலைக் குற்றச்சாட்டு அம்பிகாவின் விடுதலையை கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியது

புத்ரா ஜெயா, ஜூன் 23 – பணிப் பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து 62 வயதுடைய MA அம்பிகா என்ற பெண்மணியின் விடுதலையை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது. 2018-ஆம் ஆண்டு , பிப்ரவரி 18-ஆம் தேதி இந்தோனேசிய வேலைக்காரப் பெண்ணை புக்கிட் மெர்தாஜாம் Medan Kota Permai-யில் உள்ள தமது வீட்டில் அம்பிகா கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அம்பிகாவை அந்த கொலைக்குற்றச்சாட்டிலிருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி ஜோர்ஜ் டவுன் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. அந்த தீர்ப்பை கடந்த ஆண்டு மேல் முறையீடு நீதிமன்றமும் நிலைநிறுத்தியது. எனினும் அந்த தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பு கூட்டரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. மேல் முறையீடு நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி Vernon Ong தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!