திரிபோலி, பிப் 10 – லிபிய பிரதமர் Abdulhamid al-Dbeibah கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார். தமது காரில் Abdulhamid வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது மற்றொரு வாகனத்திலிருந்து அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் அவர் மீது தோட்டா பாயவில்லை. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஐ.நா ஆதரவிலான ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து Abdulhamid லிபியா பிரதமராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். லிபிய அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு முயற்சியை மேற்கொண்டு வரும் போட்டி தரப்புக்கள் பிரதமருக்கு எதிராக கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்5 hours ago