கொல்கத்தா, ஆகஸ்ட் 22 – கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவராக இருந்த 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒரு அரசியல்வாதியின் மகன் என நம்பப்படும் சஞ்சய் ராய் என்பவன் இவ்வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டான்.
பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட அப்பெண் மருத்துவரின் நகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம், தோல் ஆகியவை DNA சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் கைதாகி இருக்கும் சஞ்சய் ராயின் DNA உடன் அவை பொருந்தி இருப்பதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் ஒரு மூத்த அரசியல் தலைவர் மற்றும் மற்றொரு அரசியல்வாதியின் மகன் பெயர்கள் கிடைத்துள்ளதாக கொல்கத்தா காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
எனினும், தான் செய்த குற்றத்திற்காக துளி கூட வருந்தாத சஞ்சய் ராய், ‘நீங்கள் விரும்பினால் என்னை தூக்கில் வேண்டுமானாலும் போடுங்கள்’ என்று போலீசாரிடம் திமிராகக் கூறியுள்ளான்.
கைத்தொலைபேசி முழுவதும் ஆபாச படங்கள் மிகுந்து காணப்பட்ட நிலையில், இவனுக்கு 4 முறை திருமணமானதாக கூறப்படுகிறது.
இவ்வழக்கு பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.