Latestமலேசியா

கொல்லப்பட்ட வர்த்தகர் உடலை பேக்கில் போட்டு மலைப்பகுதியிலிருந்து கீழே வீசினர் 2 பெண்கள் உட்பட ஐவர் கைது

ஷா அலாம், மே 2 – கைகள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரின் உடல் பெட்டிக்குள் வைத்து 27 மீட்டர் உயரத்திலுள்ள Ulu Langat பள்ளத்தில் வீசப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. 40 வயது மதிக்கத்தக்க அந்த வர்த்தகரின் கழுத்து Wire ஒன்றினால் இறுக்கப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Hussein Omar Khan தெரிவித்தார்.

அந்த வர்த்தகர் காணாமல்போனதாக அவருடன் வீட்டில் தங்கியிருந்த ஒருவர் புகார் செய்ததைத் தொடர்ந்து அவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டதோடு சில சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டதாக Hussein Omar கூறினார்.

பல்வேறு தனியார் Clinic – க்குகளை வைத்திருக்கும் அந்த வர்த்தகர் April 26 ஆம்தேதி காலை 11 மணியளவில் தமக்கு அறிமுகமான நண்பர் ஒருவரை பார்க்கச்சென்றதாகவும் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லையென கூறப்பட்டது.

அந்த வர்த்தகர் காணாமல்போகுவதற்கு முன் குறுஞ்செய்தி வாயிலாக ஒரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் 228,000 ரிங்கிட்டை சேர்க்கும்படி தமக்கு தகவல் அனுப்பியிருந்ததாகவும் ஆனால் தாம் பணம் எதனையும் அந்த வங்கிக் கணக்கில் தெரிவிக்கவில்லையென அந்த ஆடவர் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.

அந்த வர்த்தகரின் படுகொலை தொடர்பில் April 27 ஆம்தேதி Kajang வட்டாரத்தில் மூன்று ஆடவர்கள் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். 22 முதல் 40 வயதுடைய அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து பல்வேறு கை தொலைபேசிகள், சந்தேகப் பேர்வழி ஒருவருக்கு சொந்தமாக Perodua Axia காரும் பறமுதல் செய்யப்பட்டது .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!