மலேசியா
கொள்கலன் விழுந்து லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி

பட்டவொர்த், மார்ச் 11 – லாரியின் தலைப்பகுதி மட்டுமுள்ள வாகனத்தை செலுத்தும் ஓட்டுநர் ஒருவர் , வாகனத்தின் மீது கொள்கலன் விழுந்து, உடல் நசுங்கி உயிரிழந்தார்.
பினாங்கு பட்டவொர்த்தில் உள்ள கொள்கலன் முனையத்தில் அந்த சம்பவம் நிகழ்ந்த வேளை, 41 வயதான அந்த உள்நாட்டு ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, மாநில தொழிலாளர் பாதுகாப்பு- சுகாதார துறையின் இயக்குநர் Hairozie Asri தெரிவித்தார்.
அந்த சம்பவத்தை அடுத்து, அந்த முனையத்தில் லாரிகள் பணியில் ஈடுபடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதோடு, தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.