
அலோஸ்டார், ஜன 26 – வழிப்பறி உட்பட கடும் குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 14 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலிடம் பாதிக்கப்பட்டவர்கள் ரொக்கம் , நகைகள், கை தொலைபேசிகள் என 700,000 ரிங்கிட்டிற்கும் கூடுதலாக இழப்புக்கு உள்ளானதாக கெடா மாநில போலீஸ் தலைவர் Hassan Wan Ahmad தெரிவித்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களுடன் 11 ஆண்களும் அடங்குவர் என்பதோடு அவர்கள் 17 க்கும் 59 வயதுக்கும் உட்பட்டவர்கள் என அவர் கூறினார். இக்கும்பலிடமிருந்து கை தொலைபேசிகள், நகைகள், ரொக்கம் மற்றும் கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக Hassan தெரிவித்தார்.