போட்டிக்சன், பிப் 17 – லுக்குட் பெட்ரோல் நிலையத்தில் ஆயுதம் ஏந்திய 5 நபர்களால் நகை வியாபாரி ஒருவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒரு பேக்கைக் கொண்ட 5 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய நகைககள் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
அந்த கொள்ளையர்களால் நேற்று கொள்ளையடிக்கப்பட்ட இதர இரண்டு பேக்குகளில் இருந்த நகைகள் கவிழ்ந்த SUV வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Aidi Sham Mohamed தெரிவித்தார்.
அந்த கொள்ளைச் சம்பவத்தில் நகைக் கடையின் உள்தரப்புக்கள் எவரும் சம்பந்தப்படவில்லை. நகை வியாபாரியை நீண்ட நாள் கண்காணித்து அவரை பெட்ரோல் நிலையத்திற்கு பின்தொடர்ந்த கொள்ளை கும்பல் திட்டமிட்டு நகைகளை கொள்ளையடித்திருப்பதாக Aidi Sham Mohamed தெரிவித்தார்.
தப்பியோடிய கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்களைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் போலீசாரிடம் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.