Latestமலேசியா

கொள்ளையின்போது வங்கிப் பணியாளரை தாக்கிய சம்பவம் வைரலானது வெளிநாட்டு ஆடவன் கைது

கோத்தா கினபாலு, பிப் 20 – வேலை செய்யும் வங்கிக்கு காலையில் வேக வேகமாக நடந்து சென்ற பெண் பணியாளர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கி அவரது கைப்பையை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகப் பேர்வழியின் காணொளி WhatsApp சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழியான வெளிநாட்டு ஆடவன் கைது செய்யப்பட்டான். வெள்ளிக்கிழமையன்று காலை 6.30 மணியளவில் நிகழ்ந்த கொள்ளையின்போது கடுமையாக தாக்கப்பட்ட 50 வயதுடைய அந்த பெண் தலையில் காயத்திற்குள்ளானார். தாம் வேலை செய்யும் வங்கிக்கு சென்று கொண்டிருந்த அந்த பணியாளரை பின்னால் வந்த ஆடவன் ஒருவன் கட்டையினால் தாக்கியதாக கோத்தா கினபாலு இடைக்கால போலீஸ் தலைவர் Kalsom Indris தெரிவித்தார்,

அந்த பெண் தம்மை தற்காத்துக்கொள்ள முயன்ற போதிலும் அந்த சந்தேகப்பேர்வழி தொடர்ந்து தாக்கியதால் அப்பெண் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அதன்பின் அப்பெண்ணின் கைப்பையை அபகரித்துக் கொண்டு அந்த சந்தேகப் பேர்வழி அங்கிருந்து தப்பியோடினான். எனினும் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த நபர் கைது செய்யப்பட்டான் என Kalsom கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!