
பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன், நிறுவிய, விர்ஜின் கேலக்டிக் (Virgin Galactic) விண்வெளி சுற்றுலா நிறுவனம், 2021-ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக தனது சூப்பர்சோனிக் விமானத்தை விண்வெளியின் விளிம்பிற்கு அனுப்பியது.
உள்நாட்டு நேரப்படி, இன்று காலை மணி 11.15 வாக்கில், நியூ மெக்சிகோவிலுள்ள, ஓடுபாதையிலிருந்து, விஎஸ்எஸ் யூனிட்டி (VSS Unity) என பெயரிடப்பட்டிருக்கும் அந்த விண்வெளி விமானம், இரு விமானிகள் மற்றும் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் நான்கு பணியாளர்களுடன் தனது சோதனை பயணத்தை தொடங்கியது.
ராக்கெட் சக்தியில் இயங்கும் அந்த விமானம், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 50 ஆயிரம் அடி அல்லது 15 ஆயிரத்து 240 மீட்டர் வரை பயணம் மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், அதில் இணைக்கப்பட்டிருக்கும் ராக்கெட் விமானத்தில் இருந்து பிரிந்து பயணத்தை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
நண்பகல் மணி 12.30 வாக்கில், அந்த விமானம் விண்வெளியை நோக்கி சென்ற தமது பயணத்தை நிறைவுச் செய்த பின்னர் மீண்டும் நியூ மெக்சிகோவில் தரையிறங்கியதாகவும் கூறப்படுகிறது.