Latestஉலகம்

கோத்தாபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்புகிறார்

கொழும்பு, செப் 2 – இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்சே நாளை சனிக்கிழமை நாடு திரும்பவிருக்கிறார் என அவருக்கு நெருக்கமாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை மாதம் தமது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பெரிய அளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கோத்தாபய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பியோடினார். தொடக்கத்தில் மாலத்தீவுக்குச் தப்பிச்சென்ற அவர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று இரண்டு வாரத்திற்கு மேலாக அங்கு தங்கியிருந்தார். கடந்த சில நாட்களாக தாய்லாந்தில் தங்கியிருக்கும் அவர் நாளை கொழும்பு திரும்பவிருக்கிறார். இலங்கையின் பொதுஜன பெருமுனா கட்சி கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கோத்தாபய ராஜபக்சே நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை அதிபர் ரணில் விக்ரமசிங்கே செய்து வருவதாக அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!