Latestமலேசியா

மலேசியாவின் கறிபாப் உலகின் சிறந்த பலகாரங்களில் ஒன்றாக TasteAtlas தேர்வு செய்துள்ளது

கோலாலம்பூர், ஜன 22 – மலேசியாவின் கறிபாப் (Karipap) உலகின் 5 ஆவது சிறந்த பலகாரமாக TasteAtlas குறிப்பிடப்பட்டுள்ளது. TasteAtla sகறிபாப்பை ஐந்தாவது சிறந்த பலகாரமாக தரவரிசைப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற பிரான்ஸ் மற்றும் எகிப்திய பலகாரங்களான குரோசண்ட் மற்றும் குனாஃபா போன்றவை முறையே எட்டாவது மற்றும் 10வது இடத்தைப் பிடித்துள்ளன. கறிப்பாப்பில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தனித்துவமான சுவையான கோழிக் இறைச்சிக்கறி மற்றும் உருளைக்கிழங்கு நிரப்புதல்கள் மற்றும் அந்த பலகாரத்தின் அமைப்பு மற்ற பலகாரங்களைவிட தனித்துவமாக இருப்பதால் புகழ்பெற்ற உணவுப் பயண இணய முகப்பு வழிகாட்டியான “TasteAtlas”-சின் ஐந்திற்கு மேல் 4.6 மதிப்பெண்களை பெற்றுள்ளது.

கறிப்பாப் அல்லது கறி பஃப் (Curry puff) என்பது கோழி இறைச்சி மற்றும் உருளைக்கிழங்கு கறி நிரப்பப்பட்ட ஒரு சிறிய, ஆழமாக வறுத்த அல்லது சுடப்பட்ட பலகாரம் ஆகும். மலாய் தீபகற்பம் மற்றும் சுமத்ரா மற்றும் போர்னியோவின் சில பகுதிகளிலிருந்து மலாய்க்காரர்களால் அந்த சுவையான சிற்றுண்டி கண்டுபிடிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது என “TasteAtlas” தெரிவித்தது. கறிபாப்பின் வெளியில் மிருதுவாகவும், உள்ளே சூடாகவும் மென்மையாகவும் இருக்கும் அம்சம், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பலருக்கு விருப்பமான பலகாரமாக அமைந்திருப்பதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!