
கோலாலம்பூர், நவ 21 – கோத்தா டமன்சாரா அப்டவுன் (Uptown)னில் நேற்றிரவு நிகழ்ந்த தீவிபத்தில் 20 அங்காடிக் கடைகள் அழிந்தன. நேற்றிரவு மணி 8.34 அளவில் அத்தீவிபத்து குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அங்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீ மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் தெரிவித்தார். தீயணைப்பு படையினர் அங்கு சென்றடைவதற்குள் வரிசையாக இருந்த அங்காடிக் கடைகளில் 90 விழுக்காடு அழிந்துவிட்டதோடு, ஒரு கட்டிடத்தில் இருந்த உடற்பயிற்சி நிலையமும் 50 விழுக்காடு எரிந்துவிட்டது. அந்த தீ விபத்தில் எவரும் காயம் அடையவோ அல்லது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.