
ஜொகூர் பாரு, செப் 3 – ஜொகூர், Kota Tinggi-க்கு அருகே Senai – Desaru விரைவுச் சாலையில் மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் மரணம் அடைந்தனர். Perodua Bezza காரில் பயணம் செய்தவர்களில் அதன் ஓட்டுனரும் இதர இரண்டு பயணிகளும் மாண்டனர். 20 வயதுடைய Iqbal Faiz Mat Shah , 19 வயதுடைய Nurul Afrahrina Sazli மற்றும் Nurina Izzatie Kamarul ஆகியோர் அந்த விபத்தில் உயிரிழந்தனர் என அடையாளம் காணப்பட்டதாக Kota Tinggi மாவட்ட போலீஸ் தலைவர் Hussin Zamora தெரிவித்திருக்கிறார்.
இந்த விபத்தில் கடுமையான காயத்திற்குக்குள்ளான மற்றொரு பயணியான 19 வயதுடைய Izznur Harith மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த நால்வரும் Perodua Bezza காரில் Desaru-விலிருந்து Senai-க்கு சென்றுகொண்டிருந்தபோது அவர்களது கார் மற்றொரு காரை முந்திச் சென்றபோது இதர இரண்டு கார்களில் மோதியது.
இந்த விபத்தில் MPV வாகனத்தில் இருந்து மற்றொரு ஆடவரும் 11 வயது சிறுமி மற்றும் மேலும் இரண்டு பெண்களும் காயம் அடைந்தனர். மற்றொரு காரைச் சேர்ந்த 50 வயது ஓட்டுனர் காயம் எதுவுமின்றி உயிர் தப்பியதாக Hussin Zamora தெரிவித்தார்.