
கோலாலம்பூர், மே 29 – Gopio எனப்படும் மலேசிய இந்திய வம்சாவளி அமைப்பு ஜூன் மாதம் 2ஆம்தேதி முதல் ஜூன் 4 –ஆம் தேதிவரை அனைத்துலக இந்தியர் கலாச்சார விழாவை விவேகனாந்த பள்ளி ஆசிரம வளாகத்திலும் அதன் ஆசிரம மண்டபத்திலும் நடத்தவிருக்கிறது. இந்த அனைத்துலக விழாவில் 10,000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனித வள அமைச்சர் வி. சிவகுமார் இநத நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என Gopio தலைவர் எஸ்.குணசேகரன் தெரிவித்தார். இந்திய வெளி விவகார துணையமைச்சர் V.முரளிதரனும் இநத நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சிறப்பு பிரமுகராக அழைக்கப்பட்டுள்ளார் என குணசேகரன் தெரிவித்தார்.
இந்த மூன்று நாள் விழாவை ஜூன் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணியளவில் இந்திய தூதர் B.N Reddy முடித்துவைப்பார். முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த விழாவில் அனைத்து நிகழ்விலும் திரளாக வந்து கலந்துகொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்த விழாவில் மலேசிய இந்திய வம்சாவளியினர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் S.Sasidharan மேலும் விவரங்களை தெரிவிக்கிறார்.