கோலாலம்பூர், மார்ச் 7 – கிள்ளான் பள்ளத்தாக்கில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதை அரசாங்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். Dang wanggi பகுதியில் ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் அம்பாங், ஜாலான் லெபோ அம்பாங், ஜாலான் ராஜா லாவுட், ஆகிய இடங்களில் நீர் மட்டம் உயர்ந்ததாக Nadma எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் அறிவித்தது.
ஜாலான் துன் ரசாக்கில் கோம்பாக் ஆற்றின் நீர் மட்டம் அபாய கட்டத்தை மிஞ்சியிருப்பதாகவும் Nadma வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. செந்தூலில் Batu ஆறு, jambatan Suliman மற்றும் Lebuh Pasar ரில் கிள்ளான் ஆறு மற்றும் Jalan Parlimen னில் கோம்பாக் ஆற்றிலும் நீர் அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளது.
மேலும் செராசில் Jalan Pekak Selatan. Sentul லில் Jalan Segambut , Brickfield டில் Besraya expressway யும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. கோலாலம்பூரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22 பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டனர்.