கோலாலம்பூர், பிப் 8 – டத்தோஸ்ரீ அன்வாரின் முன்னாள் அரசியல் செயலாளரும் பேரா பி.கே.ஆர் தலைவருமான Farhash Wafa Salvador Rizal Mubarak கோம்பாக் பி.கே.ஆர் டிவிசன் தேர்தலில் சிலாங்கூர் மந்திரிபுசார் Amirudin Shari யை எதிர்த்து போட்டியிடவிருக்கிறார். இது வழக்கமான ஜனநாயக நடைமுறையில் ஒன்றாகும் என்பதோடு கட்சியின் விதிமுறைக்கு ஏற்பவே தாம் போட்டியிடுவதாக Farhash கூறினார். கோம்பாக் பி.கே. ஆர் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடுவதால் கட்சியின் ஒற்றுமை சீர்குலையும் என்று அர்த்தம் இல்லை. டிவிசன் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உறுப்பினர்களைப் பொறுத்ததாகும் என அவர் விவரித்தார்.
Related Articles
Check Also
Close