Latest
கோயிலுக்குள் வெளிப்பட்ட காதல் – நிர்வாகம் திடீர் நடவடிக்கை

இந்தியா ஜூலை 5 – கேதார்நாத் கோயிலில் பெண் ஒருவர் தனது காதலனுக்கு ப்ரொபோஸ் (Propose) செய்த விவகாரம் கண்டனத்திற்கு உள்ளான நிலையில், இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி காவல்துறைக்கு கோயில் நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில், “கோயிலுக்குள் மத உணர்வுகளுக்கு எதிராக வீடியோக்கள், யூடியூப் ஷாட்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்குபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல எதிர்காலத்தில் பக்தர்களின் கைப்பேசிகளை வெளியே வைத்துவிட்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது.
வீடியோவில் இருந்த காதலர்களுக்கு கடும் கண்டனம் எழுந்தாலும், மறுபுறம் அவர்களுக்கு பலர் ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றனர்.