Latestமலேசியா

கோர விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் உடல்கள் தகனம்

கோலாலம்பூர், மார்ச் 1 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, தலைநகர் சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்த கணவன் மனைவி மற்றும் அவர்களது இரு பிள்ளைகளின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவுகளின் இறுதி அஞ்சலிக்குப் பின்னர், காலை மணி 11-க்கு Bangsar baru-வில் உள்ள வீட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்டு அவர்களது உடல்கள், பெட்டாலிங் ஜெயா தகனம் செய்யும் பகுதியில் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, இறுதி அஞ்சலியில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாமி பட்சிலும் ( Fahmi Fadzil ) கலந்து கொண்டிருந்தார்.

இவ்வேளையில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் விபத்துக்குள்ளான பகுதியான சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலை, அதிகம் விபத்து நிகழும் பகுதியாக இருப்பதால், அந்த சாலையில், விபத்துகளை தவிர்க்கக் கூடிய சில மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும்படி, Fahmi Fadzil, DBKL –கோலாலம்பூர் மாநகர் மன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்த நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில், 32 வயது Damani Paresh, அவரது மனைவி தினிஷா சந்திரசேகரன், அவர்களது 3, 4 வயதுடைய இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த அந்த தம்பதியர் மூன்றாவது குழந்தையின் வருகையை எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!