
கோலாத் திரெங்கானு, ஜன 9 – கோலாத்திரெங்கானு நகரில் முதலை ஒன்று சிக்கிக்கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலை திரெங்கானு வன விலங்கு பூங்காத்துறையின் இயக்குனர் Loo Kean Seong மறுத்திருக்கிறார். உண்மையில் பகாங் , குவந்தானில் பிடிபடுவதற்கு முன் கால்வாயில் சிக்கிக் கொண்ட முதலையின் 40 வினாடிகளைக் கொண்ட காணொளிதான் நேற்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.
அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது உண்மைக்கு புறம்பான தகவல்கள் மற்றும் அது தொடர்பான காணொளிகளை பகிர்வதை பொதுமக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். புத்தாண்டில் இதுவரை திரெங்கானுவில் முதலை நடமாட்டம் குறித்த எந்தவொரு புகாரையும் வனவிலங்கு பூங்காத்துறை பெறவில்லையென Loo Kean Seong கூறினார்.