
கோலாலம்பூர், செப் 2 -டிக்டோக்கில் கடந்த இரு நாட்களாக வைரலாகி இருப்பது கோலாலம்பூரின் வானில் பறந்து வந்த மர்மப் பொருள் குறித்த காணொளி ஒன்றுதான்.
தேசிய தின கொண்டாட்டத்தின் வான வேடிக்கைகளை படம் பிடிக்கும் நோக்கில் கோலாலம்பூர் கோபுரம் மற்றும் இரட்டைக் கோபுரத்தை நோக்கி காமிராவை வைத்திருந்த நபர் ஒருவரின் பதிவில் இக்காட்சிகள் இடம்பெற்றிருந்தது அவருக்கு அதிர்ச்சியையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியது.
அது என்னவென்று தெரிந்துக் கொள்ள அந்த காணொளியை zoom செய்து பார்த்தும் அது என்னப் பொருள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான் பதிவு செய்தது, ஒரு விண்கல்லா? போர் விமானமா? அல்லது வேற்று கிரகவாசியின் பறக்கும் தட்டா என பல கேள்விகளோடு அந்தக் காணொளியை அந்நபர் தனது styfly Malaysia எனும் டிக் டோக் கணக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.
அவர் எதிர்பார்த்தது போல பலரும் ஆளுக்கொரு கருத்தை கூறியுள்ளனர். வேற்று கிரகவாசி ஊடுறுவி விட்டான், நட்சத்திரம் , விண்கல், வானவேடிக்கை என பலரும் தங்களின் ஆருடங்களை வெளியிட்டிருந்த வேளையில் இதுவரை அதை உறுதி படுத்தும் வகையில் ஆதாரத்தை யாரும் வெளியிடவில்லை. இதில் ஒருவர் இச்சம்ம்பவம் குறித்து போலிஸ் விசாரிக்க புகார் செய்யுமாறூம் பரிந்துரைத்திருக்கின்றார். மிக வேகமாக ஓளிவட்டத்தோடு வானில் பறக்கும் அந்தப் பொருள் என்னவாக இருக்கும் எனும் மர்மம் இன்னும் நீடிக்கிறது.