கோலாலம்பூர், அக்டோபர் 2 – கோலாலம்பூரிலுள்ள Kuen Cheng உயர்நிலைப் பள்ளியில், நேற்று மாலை நடந்த சம்பவத்தில், பள்ளி மைதானத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததை அப்பள்ளி உறுதி செய்துள்ளது.
இச்சூழலில், உடனடி அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, உரிய அதிகாரிகளுக்கு விரைவாக அறிவிக்கப்பட்டதாக அப்பள்ளி தரப்பு தெரிவித்திருக்கிறது.
உடனடி முதலுதவி சிகிச்சைகள் இருந்தபோதிலும், அந்த மாணவர் இறந்ததை மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, இறந்த அந்த மாணவர் 13 வயது மாணவி என்றும், அப்பள்ளியின் தங்கும் விடுதியில் தங்கி படிக்கும் அவர் 8ஆவது மாடியிலிருந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும், இச்சம்பவம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதனையும் போலிஸ் இன்னும் வெளியிடவில்லை.
இந்நிலையில், பொது மக்கள் தவறான ஆருடங்களை வெளியிட வேண்டாம் என்று பள்ளி தரப்பு வலியுறுத்தியுள்ளது.