கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – கோலாலம்பூரில் உள்ள பொழுதுபோக்கு, ‘கரோவோகே’ (Karaoke) மையத்தில் சட்டவிரோதமாகப் பணிபுரிந்த 9 பெண்கள் உட்பட 27 நபர்களைக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது.
இந்த ‘கரோவோகே’ மையத்தில் சிறப்புச் சேவை அறைக்கு 16,000 ரிங்கிட் கட்டினால் போதுமானது; வெளிநாட்டுப் பெண்களின் துணையுடன் பாடுவதும் குடிப்பதும் போன்ற சேவைகளைக் கொண்டு அந்த VIP அறை வழங்கப்படுகிறது.
இதனிடையே, குடிநுழைவு துறையினர் அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட Op Gegar சோதனையில் அம்மையத்தைச் சேர்ந்தவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
முறையான பயண ஆவணங்கள் இன்றி இருப்பது மற்றும் கடவுச்சீட்டை தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக, பிடிபட்டவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக கோலாலம்பூர் குடிநுழைவு துறை இயக்குநர் வான் முகமது செளபீ வான் யூசோஃப் (Wan Mohammed Saupee Wan Yusoff) கூறியுள்ளார்.