Latestமலேசியா

கோலாலம்பூரில் காதலிக்காக வட்டி முதலைகளிடம் RM13,000 கடனில் சிக்கிய பதின்ம வயது இளைஞன்

கோலாலம்பூர், நவ 18 – தனது காதலியை மகிழ்விப்பதற்காக 13,000 ரிங்கிட்டை கடன் வாங்கியதில் வட்டி முதலைகளிடம் பதின்ம வயது சிறுவன் சிக்கிக் கொண்டான். வட்டி முதலைகள் அல்லது சட்டவிரோதமாக பணம் வட்டிக்கு விடுபவர்களிடம் கடன் மோசடியில் சிக்கிக்கொண்ட 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 2022 இல் உருவாக்கப்பட்ட Operasi Darul Muttaqim- மிற்கு கிடைக்கப்பெற்ற புகார்களில் இதுவும் ஒன்றாகும். சிலாங்கூரைச் சேர்ந்த அந்த சிறுவன் 12 கடன் முதலைகளிடம் கடன்பட்டிருப்பது கூடுதல் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. தனது பெற்றோரிடம் கடன் வாங்குவதற்கு தர்மசங்கடத்திற்கு உள்ளானதால் அந்த சிறுவன் சட்டவிரோத கடன் முதலைகளிடம் பணம் வாங்கியுள்ளான்.

பள்ளியை விட்டு வெளியேறிய அந்த சிறுவன் டிக் டோக்கில் வட்டி முதலைகள் தொடர்பான விளம்பரத்தை கண்டு அதில் சிக்கிக் கொண்டுள்ளான். அந்த சிறுவனின் பெற்றோர் அரசு ஊழியர்களாக இருந்தபோதிலும் அவன் தற்போது தனது மாமாவுடன் இருந்துவருவதோடு பள்ளிப் படிப்பை தொடர விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் DM Fardu Ain அமைப்பின் உதவியை நாடியுள்ளான். ஆலோங் வட்டி முதலைகளிடம் சிக்கிக் கொண்ட 15 முதல் 60 வயதுடைய பாதிக்கப்பட் 3,700 பேரில் அந்த சிறுவனும் ஒருவனாவான். கடந்த மூன்று ஆண்டு காலமாக வட்டி முதலைகளிடம் சிக்கிக் கொண்ட அவர்களுக்கு DM Fardu Ain அமைப்பு உதவியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!