கோலாலம்பூர், டிச 4 – 180,000 ரிங்கிட் கடன் சுமை காரணமாக, 27 வயது மகன் மீண்டும் காணாமல் போனதால், அவனுடனான உறவை முறித்துக் கொள்வதாக அவனது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடன் கொடுத்தவர்களினால் பல ஆண்டுகள் தொல்லைக்கு உள்ளானதைத் தொடர்ந்து , தனது மகனுடனான உறவை முழுமையாக துண்டித்துக் கொள்வதாக ஒரு குடும்பம் செய்தியாளர்களிடம் தெரிவித்தது.
2018 ஆம் ஆண்டில் தனது மகனின் கடன் சுமை 200,000 ரிங்கிட் அதிகரித்ததைத் தொடர்ந்து கடன் கொடுத்தவர்களிடமிருந்து தப்புவதற்காக அவன் கெடாவிற்கு தப்பிச் சென்றதாகவும் இதனால் தனது மறைந்த கணவரின் காரை விற்றதோடு அவரது காப்புறுதி தொகையை மீட்டு கடனைக் தீர்த்ததாக பெரும் வேதனையோடு அந்த இளைஞனின் தாயார் தெரிவித்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இனைய சூதாட்டம் மற்றும் விளையாட்டு பந்தயத்தில் ஈடுபட்டு கடனுக்கு உள்ளாகியதால் அவனுடனான உறவை முறித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லையென அந்த இளைஞனின் மூத்த சகோதரியும் தெரிவித்தார்.