கோலாலம்பூர், அக்டோபர்-10 – கோலாலம்பூர் சாலையொன்றில் தான் கண்ட விநோத காட்சியின் dashcam பதிவை, X தள பயனர் ஒருவர் பகிர்ந்திருப்பது வலைத்தளவாசிகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
அவர் காரில் செல்லும் போது, திடீரென இடது பக்கத்திலிருந்து ஆளே இல்லாத ஒரு மோட்டார் சைக்கிள் சாலைக்குள் புகுந்தது.
மிக நெருக்கத்தில் வந்ததால், அந்த ‘மர்ம’ மோட்டார் சைக்கிளை நோக்கி காரோட்டி horn அடித்தார்.
ஆளில்லா விட்டாலும், காரின் horn சத்தம் காதில் விழுந்தது போல் அந்த மோட்டார் சைக்கிள் தன் பாட்டுக்கு மீண்டு சாலையிலிருந்து ஒதுங்கி இடப்பக்கமாக போய்விட்டது.
ஆளில்லா மோட்டார் சைக்கிள் குறித்து காரில் சென்றவர்களுக்கு குழப்பம் நீடித்தாலும், வீடியோவை உற்று நோக்கிய வலைத்தளவாசிகள் உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்து விட்டனர்.
இடப் பக்க சாலைக்கு வெளியே, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிளோட்டி கீழே விழுந்து விட்டார்.
ஆளில்லாமல் கட்டுப்பாட்டை இழந்த அந்த மோட்டார் சைக்கிள் தான் சாலைக்குள் புகுந்திருக்கிறது.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய 2 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கும் என்னவானது என்பது குறித்து தகவலில்லை.