கோலாலம்பூர், மார்ச் 11 – இன்று மாலை பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து கோலாலம்பூரில் சில இடங்களில் மோசமான வெள்ளம் ஏற்பட்டது. கோலாலம்பூர் மாநகரின் மையப் பகுதியில் Jalan Kia Peng கில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ள காட்சியைக் கொண்ட காணொளி ஒன்றை டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அங்கு நிறுத்தப்பட்டுள்ள கார்கள் சகதியுடன் கொண்ட வெள்ள நீரில் மூழ்கியிருக்கும் காட்சியை அந்த காணொளியில் காண முடிகிறது. Masjid Jamek கில் வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிக்கிக்கொண்ட கார் ஒன்றை தள்ளிச் செல்வதற்கு சிலர் உதவிபுரிவதை மற்றொரு வலைத்தலைவாசி ஒருவர் சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜாலான் கூச்சாய் லமாவிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்ட காணொளி WhatsApp புலனத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனிடையே கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ரா ஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் சபாவில் இன்றிரவு 7 மணிவரை கடுமையாக மழைபெய்யும் என மலேசிய வானிலைத்துறை எச்சரித்துள்ளது.