
கோலாலம்பூர், மார்ச் 24 – தூய்மையற்ற நிலையில் உள்ள 16 உணவுக் கடைகளை மூடும்படி கோலாலம்பூர் மாநாகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த கடைகளின் லைசென்ஸ் தொடர்பில் 60 குற்றப்பதிவு அறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. Jalan Sri Bintang, Taman Salak Selatan, Jalan Leboh Ampang, மற்றும் Bangsar Village ஆகிய இடங்களில் செயல்பட்ட தூய்மையற்ற உணவுக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தது.