கோலாலம்பூர், ஆகஸ்ட் -29 – தலைநகரில் புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அனுமதி வழங்கல், புவியியல் ஆய்வு மீதான பணிக்குழு அமையும் வரை ஒத்திவைக்கக்கப்படுகிறது.
கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தபா (Dr Zaliha Mustafa) அதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வேளையில் கோலாலம்பூர் இன்னமும் பாதுகாப்பானதே என அவர் மறு உறுதியளித்தார்.
என்றாலும் நிலம் உள்வாங்கிய மஸ்ஜித் இந்தியா சுற்றுப் பகுதிகளில் சற்று கவனமாக இருக்கும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
சம்பவ இடத்தை சற்று தள்ளியே இருக்குமாறு அதிகாரிகள் நினைவுறுத்தியிருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில், நில அமிழ்வு மற்றும் இதர ஆபத்துகளைக் கண்டறிய, கோலாலம்பூர் விரைவிலேயே வரைபடமிடல் (mapping) செய்யப்படவிருக்கிறது.
ஆனால் மாநகரின் ஒட்டுமொத்த நிலத்தையும் வரைபடமெடுத்து முடிக்க சற்று கால அவகாசம் பிடிக்குமென்றார் அவர்.
Kampung Kerinchi, Jalan Pantai Permai-யில் கால்வாய் பகுதியில் திடீர் பள்ளமேற்பட்ட பகுதியைப் பார்வையிட்ட பிறகு சாலிஹா அவ்வாறு சொன்னார்.