கோலாலம்பூர், நவ 28 – கோலாலம்பூர், ஜாலான் பெட்டாலிங்கில் சிறிய அளவில் போதைப் பொருள் விநியோகம் செய்துவந்த 48 வயது ஆடவனை போலீசார் கைது செய்தனர். செவ்வாய்க்கிழமையன்று காலை மணி 11.50 அளவில் 26.1 கிரேம் ஹெரோய்ன் வைத்திருந்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் சுய்ஸ்மி எப்பெண்டி சுலைமான் ( Suizmie Affendy Sulaiman ) தெரிவித்தார். இதற்கு முன் போதைப் பொருள் மற்றும் குற்றவியல் பின்னணிகளை கொண்டிருந்த அந்த நபர் விசாரணைக்கு உதவும் பொருட்டு டிசம்பர் 3ஆம் தேதிவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
இதனிடையே கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு பொழுதுபோக்கு மையங்களுக்கு Methamphetamine போதைப் பொருளை விநியோகித்ததில் சம்பந்தப்பட்ட 30 வயதுடைய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டதாக Suizmie கூறினார். இந்த ஆண்டு மத்தியிலிருந்து போதைப் பொருள் விநியோகித்து வந்துள்ள அந்த ஆடவன் சந்தேகத்திற்குரிய வகையில் விடியற்காலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டதோடு அவனிடமிருந்து 6,140 ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.