Latestமலேசியா

கோலாலம்பூரில் ரகசிய சுரங்க வழியாக தப்ப முயன்ற நடன விடுதி உபசரணை பெண்களின் முயற்சி முறியடிப்பு

கோலாலம்பூர், நவ 20 – போலீஸ் அதிகாரிகளின் அதிரடி சோதனை நடவடிக்கையின்போது அச்சமடைந்த நடன விடுதியின் உபசரணைப் பெண்களும் இதர தனிப்பட்ட நபர்களும் அங்குள்ள ரகசிய சுரங்க பாதையில் மறைந்து தப்பியோடும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இன்று அதிகாலை மணி 3. 30 மணியளவில் ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்திற்குள் இருந்த ரகசிய சுரங்க பாதையில் மறைந்திருந்த அவர்கள் கைது செய்யப்பட்டனர். மூன்று அதிகாரிகள் மற்றும், கோலாலம்பூர் போலீஸ் அதிரடிப் படையைச் சேர்ந்த 25 பேர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது 23 மற்றும் 53 வயதுடைய 103 தனிப்பட்டட நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

அந்த விடுதியின் நிர்வாகியாக இருந்த உள்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்,மற்றும் அங்கு வேலை செய்து வந்த 9 வெளிநாட்டு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா ( Rusdi Md Isa ) தெரிவித்தார். உள்நாட்டைச் சேர்ந்த மூன்று ஆடவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் பிரிக்பில்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதோடு விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!