Latestமலேசியா

கோலாலம்பூரில் 23 இடங்களில் வெள்ளம்

கோலாலம்பூர், மார்ச் 8 – கடுமையான மழையைத் தொடர்ந்து கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதால் வெளியேற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Kampung Baruவில் Sultan Sulaiman மண்டபத்திலும், Jalan klang Lamaவில் சரஸ்வதி தமிழ் தொடக்கப் பள்ளியிலும் 251 பேர் தங்கியிருப்பதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் Sahidan Kassim தெரிவித்தார்.

நேற்று மாலை 3 மணி முதல் பெய்த மழையினால் கோலாலம்பூரில் 23 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துவிட்டதாக Sahidan Kassim கூறினார்.

இதனிடையே இரண்டு மணி நேரம் அளவுக்குஅதிகமாக மழை பெய்தது, நேற்று கோலாலம்பூரில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாக சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சர் Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு சராசரி 200 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் நேற்று ஒரே நாள் மட்டும் சராசரி 206 மீட்டர் மழைபெய்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!