சாலை போக்குவரத்துத்துறை, கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் , தேசிய போதைப்பெருள் குற்றவியல் விசாரணைத் துறை கூட்டாக வெவ்வேறு இடங்களில் மேற்கொண்ட மூன்று ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் 900க்கும் மேற்பட்டோருக்கு குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன. அவர்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சில மோட்டார் சைக்கிளோட்டிகளும் அடங்குவர். சிலர் போலீஸ் நடவடிக்கையிலிருந்து பிடிபடாமல் இருப்பதற்காக தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கூடியிருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது.
நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கை இன்று விடியற்காலை 5 மணிக்கு முழுமையடைந்ததாக கோலாலம்பூர் போலிஸ் துணைத்தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் யூசோப் ( Datuk Azry Akmar Ayob ) தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 2,397 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. போதைப் பொருள் பயன்படுத்திவிட்டு வாகனங்கள் ஓட்டிய எட்டு பேருடன், மது போதையில் கார் ஓட்டிய 13 பேரும் கைது செய்யப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அஸ்ரி தெரிவித்தார்.