கோலாலம்பூர், ஜனவரி-11, கோலாலம்பூர், ஜாலான் ஸ்டோனரில் நேற்று மாலை மரம் சாய்ந்து மேலே விழுந்ததில், 3 வாகனங்கள் சேதமடைந்தன.
தகவல் கிடைத்து, ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 9 வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
கார்களின் மீது விழுந்துகிடந்த மரத்தை வெட்டி அவர்கள் அப்புறப்படுத்தியதாக தீயணைப்புத் துறையின் செயல்பாட்டு கமாண்டரும் மூத்த அதிகாரியுமான ஜி.சந்திரசேகரன் கூறினார்.
எனினும் அச்சம்பவத்தில் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என்றார் அவர்.
மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் இரவு 8.15 மணியளவில் நிறைவடைந்தன.