
கோலாலம்பூர், மார்ச் 8 – வாழ்க்கை செலவீன உயர்வு உட்பட பல்வேறு காரணங்களால், மனஇறுக்கத்தால் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலமாக கூட்டரசு பிரதேசம் விளங்குகிறது.
2022 – இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், பெற்றோர் கொடுக்கும் மன அழுத்தத்தாலும், நண்பர்களுடனான உறவில் ஏற்பட்ட பிரச்சனையாலும், மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக , மக்கள் காரணங்களாக முன் வைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் Dr. Zaliha Mustafa தெரிவித்தார்.
அத்துடன் கூட்டரசு பிரதேசத்தில் அதிகமானோர் குறைந்த வருவாய் பெறும் B40 பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், அதிகமான நகர்புற ஏழைகளும் அப்பகுதியில் வசிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.