கோலாலம்பூர். பிப் 23 – கோலாலம்பூர், Pasar Borong எனப்படும் மொத்த சந்தையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எவரும் வேலை செய்யாமல் இருப்பது மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடாமல் இருப்பதை கண்காணிக்கும் நடவடிக்கையில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஈடுபட்டு வருகிறது.
கூட்டரசு பிரதேச பசார் பூரோங் சிறு சட்ட விதியின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப அங்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபடவோ அல்லது வேலை செய்ய முடியாது என கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
பெர்மிட் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் வர்த்தக உரிமையாளர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் அறிவித்துள்ளது.