Latestமலேசியா

ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 18 நாட்களில் ஆவணமில்லாத 4,026 வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூர், ஜன 21 – இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து 18 தினங்கள் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட 870 அமலாக்க நடவடிக்கையின் மூலம் ஆவணங்கள் இல்லாத 4,026 குடியேற்றக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். ஆவணமற்ற குடியேற்றக்காரர்களை வேலையில் வைத்திருக்கும் முதலாளிகளுக்கு எதிராக குடியேற்றக்காரர்கள் ஆள்கடத்தல் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார். கைது செய்யப்பட்ட குடியேறிகளில் ஆவணமில்லாத 1,497 பேர் அவர்களது தாயகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு வைத்திருந்த 42 முதலாளிகளும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!