உலு சிலாங்கூர். மே 8 – எதிர்வரும் சனிக்கிழமை மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூரின் கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு நாளில் காலையில் வானிலை நன்றாக இருக்கும் என்றும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என Met Malaysia எனப்படும் மலேசிய வானிலைத்துறை தெரிவித்திருக்கிறது. அதோடு அன்றைய தினம் வெப்ப நிலை 25 முதல் 32 செல்சியஸ் டிகிரியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலா குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு Met Malaysia வெளியிட்ட சிறப்பு வானிலை அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டன. பக்கதான் ஹரப்பான், பெரிக்காத்தான் நேசனல், Parti Rakyat மலேசியா மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் உட்பட இந்த இடைத் தேர்தலில் நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கோலா குபு பாரு சட்டமன்ற வேட்பாளராக இருந்த பாக்காத்தான் ஹரப்பானை சேர்ந்த DAP பின் Lee kee Hiong புற்றுநோயினால் காலமானதை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதால் நடைபெறும் இடைத் தேர்தலில் பதிவு பெற்ற 40,226 வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர்.