Latestமலேசியா

கோலா குபு பாரு தேர்தல் பொதுமக்களின் பாதுகாப்பை போலீசார் உறுதிப்படுத்துவர்

கோலாலம்பூர், மே 3 – கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்களிக்கும் , குறிப்பாக பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ Saifuddin Nasution Ismail தெரிவித்திருக்கிறார். கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் அங்கு பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை போலீஸ்துறை தொடங்கியதாக அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து போலீஸ் துறை பொதுமக்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளில் மும்மூரமாக கவனம் செலுத்தியிருப்பது குறித்து போலீஸ் படைத் தலைவர் தம்மிடம் தெரிவித்திருப்பதாக Saifuddin தெரிவித்தார். இன்று கோலா குபு பாரு போலீஸ் கல்லூரியில் நடைபெற்ற ஹரி ராயா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார். கோலா குபு பாரு இடைத்தேர்தலில் வாக்களிக்க விரும்புவோர் உட்பட அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.புக்கிட் அமான் போலீஸ் நிவாகத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ Azmi Abu Kassim , புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் டத்தோ Wan Hassan Wan Ahmad, Selangor போலீஸ் தலைவர் டத்தோ Hussein Omar ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!