கோலா திரெங்கானு, டிச 31 -இல்லாத குத்தகை இருப்பதாகக் கூறிய கும்பலின் மோசடியினால் வர்த்தகர் ஒருவர் 252,150 ரிங்கிட் இழந்தார். பாதிக்கப்பட்ட 47 வயதான வர்த்தகர் டிசம்பர் 23 ஆம் தேதி சந்தேகப் பேர்வழியான பெண் ஒருவர் தொடர்பு கொண்டு திரெங்கானு மாநிலத்தில் உள்ள மாரா தொழிற்நுட்பு பல்கலைக்கழக கிளை வளாகத்திற்கு பட்டமளிப்பு அங்கிகள் மற்றும் சீருடைகளை வழங்கும் குத்தகையை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று வினவியதோடு அதற்கான விலை விவரங்களையும் தெரிவித்துள்ளார். சந்தேக நபர் கொடுக்கப்பட்ட விலைக் குறிப்பை பார்த்தவுடன் அந்த குத்தகையை ஏற்றுக்கொள்வவதற்கு சம்பந்தப்பட்ட வர்த்தகர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து மோசடியினால் பாதிக்கப்பட்டதாக கோலா தெரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முகமட் நூர் ( Azli Mohd Nor ) தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த பரிவர்த்தனைக்காக அந்த வர்த்தகர் ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 252,150 ரிங்கிட் பணப்பட்டுவாடா செய்துள்ளார். எனினும் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு ஏற்ப ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் வந்து சேரவில்லை என்பதை உணர்ந்த பின்னரே அந்த வர்த்தகர் தாம் மோசடிக்கு உள்ளானதை உணர்ந்து போலீசில் புகார் செய்துள்ளதாக அஸ்லி முகமட் நோர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.