Latestமலேசியா

கோலா திரெங்கானுவில் 12வது மாடியிலிருந்து வீசப்பட்ட சைக்கிளால் காயமடைந்த பெண்ணுக்கு 5 தையல்கள்

கோலாத் திரெங்கானு, மார்ச் 26 -12 ஆவது மாடியிலிருந்து வீசப்பட்ட சைக்கிள் ஒன்று ஒரு பெண்ணின் தலையில் விழுந்ததில் 5 தையல்கள் போடும் அளவுக்கு காயத்திற்கு உள்ளானார்.

Padang Hiliran னிலுள்ள PPR மக்கள் வீடமைப்பு திட்டத்தின் 12 ஆவது மாடியிலிருந்து வீசப்பட்ட சைக்கிள் தலையில் விழுந்ததில் பாசிர் பஞ்சாங்கிலுள்ள கெமாஸ் (Kemas) பாலர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்துவரும் 43 வயதுடைய Azuraini Yazid காயம் அடைந்தார்.

குப்பையை வீசச் சென்றபோது தனது மனைவின் தலை மீது சைக்கிள் விழுந்ததில் தலையில் ரத்தம் வந்ததோடு திடீரென மயக்கமடைந்த கீழே விழுந்ததாக அப்பெண்ணின் கணவரான 48 வயதுடைய ஜூஸ்ரி இப்ராஹிம் (Jusri Ibrahim) தெரிவித்தார்.

தனது மகனுக்கு சொந்தமான அந்த சைக்கிள் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்ததாகவும் அதனை மற்றொரு தனிப்பட்ட நபர் வீசியதாக ஜூஸ்ரி தெரிவித்தார்.

இதனிடையே இந்த சம்பவத்தை கோலாதிரெங்கானு போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அஸ்லி முகமட் நோர் (Azli Mohd Noor) உறுதிப்படுத்தியதோடு அந்த சைக்கிளின் உரிமையாளரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் எனினும் 12 ஆவது மாடியிலிருந்து அந்த சைக்கிள் வீசப்பட்டதில் தனக்கு தொடர்பு இல்லையென்று அவர் தெரிவித்துள்ளதாக அஸ்லி கூறினார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலை சீராக இருப்பதோடு அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்.

PPR அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் உயரமான மாடியிலிருந்து பொருட்களை வீசும் சம்பவங்கள் வழக்கமாக நடைபெறுகின்றன. இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு சிலாங்கூர் ,அம்பாங் தாமான் ஸ்ரீ இந்தானில் மேல் மாடியிலிருந்து வீசப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி கார் மீது விழுந்த சம்பவமும் நடந்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் Pantai Dalamமிலுள்ள ஸ்ரீ பந்தாய் பிபிஆர் (Sri Pantai PPR) அடுக்கு மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து நாற்காலி வீசப்பட்ட சம்பவத்தால் பெட்டாலிங் ஜெயா லா சாலே (La Salle) இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மூன்றாம் படி மாணவன் S .சதிஸ்வரன் மரணம் அடைந்தான்.

தனது தாயாருடன் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிக்கு நடந்து சென்றபோது இரவு மணி 8. 30 அளவில் நடந்த அந்த சம்பவத்தின் கடுமையாக காயம் அடைந்த சதிஸ்வரன் இறந்தான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!