
கோலாலம்பூர் , செப் 9 – போதைப் பொருள் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குறுகிய நேரத்திற்குள் ஆடவர் ஒருவர் குவால மூடா போலீஸ் தலைமையகத்தில் மரணம் அடைந்ததைப் புக்கிட் அமான் நன்னெறிப் பிரிவின் இயக்குனர் அஸ்ரி அஹ்மட் உறுதிப்படுத்தினார்.
நோய்வாய்ப்பட்டிருந்த 39 வயது ஆடவரிடம் ஆவணங்கள் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்பட்டபோது இறந்ததாக அவர் தெரிவித்தார். சுங்கைப் பட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஒருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வருகைப் புரிந்து சோதனை செய்தபோது அந்த ஆடவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியதாக அஸ்ரி அஹ்மட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அவரது இறப்பைத் திடீர் மரணம் என வகைப்படுத்தியப் போலீஸ் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே அந்த ஆடவரின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அஸ்ரி தெரிவித்தார்.