
மஞ்சோங், நவம்பர் 20 – பேராக், மஞ்சோங்கிலுள்ள, கால்நடை சிகிச்சை மையத்திற்கு சென்ற கோல்டன் ரெட்ரீவரின் ரக நாய் ஒன்று, அங்கிருந்தவர்களை குலுங்கி சிரிக்க வைத்ததோடு, வைரலாகி இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்தது.
அப்படி அந்த நாய் என்ன தான் செய்தது என்கிறீர்களா?
வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்த அந்நாய்யின் பற்களில் சிக்கிக் கொண்ட செருப்பை, அந்த சிகிச்சை மையத்தில் இருந்த மருத்துவர் உட்பட ஐவர் சேர்ந்து விடுவிக்க முயன்று தான் அதற்கு காரணமாகும்.
அந்த நகைச்சுவையான சம்பவம் ஒளிப்பதிவுச் செய்யப்பட்டு @wondervetanimalclinic எனும் டிக் டொக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பதை தொடர்ந்து அது இணையவாசிகள் மத்தியில் “ஹிட்” அடித்துள்ளது.
“செருப்பை விட மனமின்றி போராடும் நமது நான்கு கால் நண்பன்” என அந்த காணொளியின் கீழ் பதிவிடப்பட்டுள்ளது.
நாயிடமிருந்து செருப்பை காப்பாற்ற, கால்நடை மருத்துவர் உட்பட ஐவர் போராடுகின்றனர். எனும், சம்பந்தப்பட்ட நாயிக்கு வேறு திட்டம் இருக்கும் போல எனவும் வேடிக்கையாக குறிப்ப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இறுதியில் செருப்பை மீட்க முடிந்ததா என்பது தெரியாமலே அந்த காணொளி முடிவடைகிறது.
அதனை பார்வையிட்டு வரும் இணைய பயனர்கள் பலர், தங்கள் செல்லப் பிராணிகள் புரியும் சேட்டைகளையும் பகிர்ந்து வருகின்றனர்.