
கோலாலம்பூர், மே 23 – கோத்தா டமன்சாராவில் கோல்ப் கிளப்பிற்கு அருகேயுள்ள ஆற்றில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. இன்று அதிகாலை மணி 1.25 அளவில் அந்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா ஓ.சி.பி.டி துணை கமிஷனர் Mohamad Fakhrudin Abdul Hamid தெரிவித்தார். அந்த ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது ஒரு சடலத்தை கண்டதாக ஆடவர் ஒருவர் போலீசிற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட அந்த சடலம் சவ பரிசோதனைக்காக சுங்கைப்பூலோ மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.