கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஆறு நாள்களே எஞ்சியிருக்கும் வேளையில், தேர்தல் களம் சூடு பறந்துகொண்டிருக்கிறது.
இத்தேர்தலில் நான்கு வேட்பாளார்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது.
இதனிடையே, வேட்பாளரை தெரிவு செய்யும் பொறுப்பிலிருக்கும் சுற்றுவட்டார மக்களின் எதிர்ப்பார்ப்புகளும் கோரிக்கைகளும் என்ன என்பதை வணக்கம் மலேசியா களத்திற்கு சென்று ஆராய்ந்தது.
கோலா குபு பாரு இடைத்தேர்தல், அரசியல் வட்டாரம் மிகவும் பரபரப்பாக இருக்கு ஒரு தொகுதியாக மாறியிருக்கின்ற நிலையில், இந்தியர்களின் வாக்குதான் யார் ஜெயிப்பார்கள் என்பதை நிர்ணயிக்கவுள்ளது. எனவே கோலா குபு பாரு மக்கள் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என எதிர்பார்ப்போம்