கோலாலம்பூர், ஏப்ரல் 29 – கோல குபு பாரு இடைத்தேர்தலில் வாக்களிக்காதீர் எனும் பரவும் சிலரின் அர்த்தமற்ற தந்திரங்களுக்கு பலியாகாதீர் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு வலியுறுத்தியுள்ளார்.
18% விழுக்காடு இந்தியர்களின் வாக்குகளே கோல குபு பாருவின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கவுள்ளது.
இத்தேர்தல் நேரத்தில் சமூக வலைத்தளத்தில் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்கள் பரவும் சூழலில், உண்மையில் மக்களுக்கு பல உதவிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.
அனைவரின் வாக்குகளே கோல குபு பாருவின் அடுத்த சட்டமன்ற உறுப்பினரை தெர்வு செய்ய வழிவகுக்கும் என கோல குபு பாரு பக்காத்தன் ஹராப்பானின் இந்த இடைத்தேர்தல் இயக்குனர் Ng Sze Han தெரிவித்தார்.
இனவாத கருத்துகள் இந்த இடைத்தேர்தலுக்கு தேவையில்லை. அவ்வகையில் இந்த இடைத்தேர்தலில் அனைத்து இனங்களும் வாக்களிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கோல குபு பாரு வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களின் வாக்களிக்கும் கடமையை செய்து, சரியான தலைவரை தேர்ந்தெடுக்குமாறு தொடர்பு மற்றும் இலக்கவியல் துணை அமைச்சர் தியோ நி சிங்–ங்கும் அறிவுறுத்தினார்.
அவரின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் ஊடகங்களுடனான சந்திப்பில் பிரதமர் துறை துணையமைச்சர் எம். குலசேகரன் உட்பட சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.