
கோலாலம்பூர், ஜூன் 24 – ஜூன் 30 -குப் பிறகு கோழிக்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டாலும், கோழி விலை சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படாது .
மாறாக, கோழிக்கான புதிய உச்சவரம்பு விலையை அரசாங்கம் விரைவில் அறிவிக்குமென , பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
இதனிடையே, தீபகற்ப மலேசியாவுக்கான மின்சார – தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதையடுத்து, உலகளவில் எரிபொருள் விலை உயர்வு கண்டிருந்தாலும், அரசாங்கம் தொடர்ந்து 580 கோடி ரிங்கிட் உதவித் தொகையை வழங்குமென்றாரவர்.
அதிகரித்திருக்கும் வாழ்க்கை செலவீனம், பொருள் விலை உயர்வினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் அந்த முடிவினை எடுத்திருப்பதாக பிரதமர் கூறினார்.