Latestமலேசியா

கோழி இறைச்சி இறக்குமதிக்கான பெர்மிட் வழங்குவதை நிறுத்துவீர் – பாயன் பாரு எம்.பி சிம் ஷி ஷின் வலியுறுத்து

கோலாலம்பூர், பிப் 10 -கோழி இறைச்சி இறக்குமதிக்கான பெர்மிட் அல்லது அனுமதி வழங்க வேண்டாம் என பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் Sim Tze Tzin அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார். சீனப் புத்தாண்டு முடிவுக்கு வந்துவிட்டதைத் தொடர்ந்து கோழி இறைச்சிக்கான தேவை அல்லது பற்றாக்குறை நெருக்கடி ஏற்படவில்லை. கோழி இறைச்சியின் விலை மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பும் என்பதால் கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கான லைசென்ஸ் வழங்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் வலியுறுத்தினார்.

உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதால் நாட்டிற்கு பெரிய இழப்பாகும். உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காகவே ஒரு ஆண்டுக்கு 55 பில்லியன் ரிங்கிட்டை செலவிடுகிறோம். அதோடு இறக்குமதி பெர்மிட் வழங்கப்படுவதன் மூலம் குறிப்பிட்ட சில தரப்பினர் மட்டுமே விரைவில் லாபத்தை பெறமுடியும். வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களுக்கான அனுமதி குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஆதாயம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்பதையும் Sim Tze Tzin சுட்டிக்காட்டினார்.

கோழி பண்ணையாளர்களுக்கு உற்பத்தி உதவித் தொகையை வழங்குவதற்கு பிரதமர் Ismail Sabri Yaakub பின் அரசாங்கம் முன்வந்திருப்பது விவேகமான நடவடிக்கையாகும் என கெஅடிலான் கட்சியின் விவசாய மற்றும் மூலப் பொருள் விவகாரத்தின்பேச்சாளருமான Sim Tze Tzin கூறினார். கோழி உற்பத்தி செலவின உதவியாக ஒரு கிலோவுக்க 60 சென் என 4 மாதங்களுக்கு கோழிப்பண்ணை நடத்துவோருக்கு உதவி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது கோழிப்பண்ணையாளர்களுக்கு இனிப்பான செய்தியாகும். இத்தகைய உதவி வழங்கப்பட வேண்டும் ஏற்கனவே பி.கே.ஆர் கட்சி வலியுறுத்தி வந்துள்ளதையும் Sim Tze Tzin தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!